Published : 20 Mar 2016 04:31 PM
Last Updated : 20 Mar 2016 04:31 PM
ஊருக்கு ஊர் அல்வா செய்தாலும் ஜீவநதி தாமிரபரணியின் தண்ணீர்தான் திருநெல்வேலி அல்வாவின் பிரத்யேக சுவைக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இந்த அல்வாவை வீட்டில் செய்வதும் எளிது.
எப்படிச் செய்வது?
அல்வாவின் நிறத்துக்கு:
ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய்யில் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறுங்கள். முதலில் கற்கண்டு போல மாறி, பிறகு கரையும். விரும்பும் நிறத்துக்கு சர்க்கரை மாறும்வரை பொறுத்திருந்து இறக்கிவிடுங்கள்.
நன்கு கழுவிய சம்பா கோதுமையை எட்டு முதல் பத்து மணி நேரம்வரை தண்ணீரில் ஊறவையுங்கள். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு அரைத்துப் பால் எடுங்கள். பாலை வடிகட்டி, தனியாக வையுங்கள். கோதுமை சக்கையில் மீண்டும் அரை கப் தண்ணீர் விட்டு அரைத்துப் பால் எடுங்கள்.
அடுப்பைச் சிறு தீயில் வைத்து, அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு, சர்க்கரையைச் சேர்த்து கரையும்வரை கிளறுங்கள். அல்வாவின் நிறத்துக்கான சர்க்கரைக் கரைசலையும் சேருங்கள். சர்க்கரை கரைந்த பிறகு கோதுமைப் பாலைச் சர்க்கரை கரைசலில் மெதுவாகச் சேர்த்து, கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். சிறிது நேரத்தில் பால் கெட்டியாகும். அப்போது சிறிது நெய் சேருங்கள். எப்போதெல்லாம் அல்வா இறுகுகிறதோ அப்போதெல்லாம் நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டேயிருங்கள். முக்கால் மணி நேரத்தில், அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் கரண்டியோடு சேர்ந்து நகரும். சிறிது நெய் அல்வாவை விட்டுப் பிரியும்.
இதுவே அல்வா தயாரானதுக்கான அறிகுறி. விருப்பப்பட்டால், முந்திரியை நெய்யில் வதக்கி கடைசியில் சேர்க்கலாம். தயாரான அல்வாவை, வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிவிடவும். ஆறியதும் பரிமாறுங்கள்.
- சங்கரி பகவதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT