Published : 12 Jul 2015 12:29 PM
Last Updated : 12 Jul 2015 12:29 PM
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் பெரும்பாலான குழந்தைகள் க்ரீம் பிஸ்கட், சாட் வகைகள், பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி ஆகியவற்றைச் சாப்பிடுகிறார்கள். இவற்றில் இருக்கும் சுவையூட்டிகளும் மணமூட்டிகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். வீட்டிலேயே சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகளைச் செய்யலாம்.
அவை தரத்துடன் இருப்பதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பிருந்தா ரமணி. நிமிடங்களில் தயாரித்துவிடக்கூடிய சில மாலை நேர நொறுக்குத் தீனி வகைகளை நம்முடன் இங்கே அவர் பகிர்ந்துகொள்கிறார்.
என்னென்ன தேவை?
பருப்பு உசிலி செய்ய:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப்
சோயா உருண்டைகள் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கொழுக்கட்டை செய்ய:
பச்சரிசி மாவு - 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுந்து, ஊறவைத்த கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதலில் பருப்பு வகைகளை ஊற வைத்து, அவற்றுடன் மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். பிறகு தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கலக்கவும்.
ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சோயா உருண்டைகளைப் போட்டு மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து உருண்டைகளை எடுத்துத் தண்ணீரைப் பிழியவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். சோயா விழுதை, அரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையை இட்லித் தட்டுகளில் ஊற்றி, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு போட்டுக் கலந்து, சூடான தண்ணீரை ஊற்றி கரண்டியால் கிளறவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். இதில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கிளறி வைக்கவும்.
கிளறி வைத்திருக்கும் மாவைக் கையில் கொஞ்சம் எண்ணெய் தொட்டுக்கொண்டு சுண்டைக்காய் அளவுக்கு ஒரே மாதிரியாக உருட்டவும். உருட்டிய உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT