Last Updated : 03 Sep, 2015 01:15 PM

 

Published : 03 Sep 2015 01:15 PM
Last Updated : 03 Sep 2015 01:15 PM

விடுமுறை விருந்து: கிர்னிப் பழ கீர்

என்னென்ன தேவை?

தோல் நீக்கிப் பொடியாக அரிந்த கிர்னிப் பழம் - 1 கப்

பச்சரிசி நொய் - 3 டீஸ்பூன்

வெல்லம் - 5 டீஸ்பூன்

ஏலப் பொடி - சிட்டிகை

பொடியாகச் சீவிய பாதாம் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கிர்னிப் பழத்துடன் சிறிதளவு நீர் சேர்த்துக் கெட்டியாக அடிக்கவும். அடி கனமான வாணலியில் 3 டீஸ்பூன் அரிசி நொய்யை அரை கப் தண்ணீரில் வேகவிடவும். நன்றாக வெந்ததும் அடித்த கிர்னிப் பழம், வெல்லத்தைச் சேர்த்துக் கொதி வந்ததும், ஏலப் பொடியைத் தூவி இறக்கவும். சீவிய பாதாமைத் தூவி அலங்கரிக்கவும். வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையையும் சேர்க்கலாம்.

தொகுப்பு: ப்ரதிமா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x