Last Updated : 28 Sep, 2015 12:33 PM

 

Published : 28 Sep 2015 12:33 PM
Last Updated : 28 Sep 2015 12:33 PM

சோள ரவை புட்டு

என்னென்ன தேவை?

சோள ரவை - ஒரு கப்

நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல் - தலா கால் கப்

ஏலக்காய் - 2

நெய் - சிறிதளவு

முந்திரி (உடைத்தது) - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சோள ரவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் வெதுவெதுப்பான உப்பு நீர் தெளித்துப் பிசறி சிறிது நேரம் அப்படியே வையுங்கள். பிறகு இதை ஆவியில் வேகவையுங்கள். வெந்ததைத் தட்டில் கொட்டி தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறுங்கள்.

நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் கலந்து பரிமாறுங்கள். சோள ரவை வேக நேரம் எடுக்கும். மிக்ஸியில் அரைத்த பிறகு வேகவைத்தால்தான் நன்றாக வேகும். இல்லையென்றால் வேகாதது மாதிரி இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x