Published : 16 Aug 2015 03:28 PM
Last Updated : 16 Aug 2015 03:28 PM
என்னென்ன தேவை?
மில்லட் ஃப்ளேக்ஸ் - 1கப்
தேன், பாதாம் பவுடர் - தலா 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த வேர்க்கடலை - கால் கப்
தேங்காய்ப் பொடி, வெண்ணெய், பனஞ்சர்க்கரை - தலா 1 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதலில் வெண்ணெயைக் குழைத்து, அதனுடன் பனஞ்சர்க்கரையை சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். மில்லட் ஃப்ளேக்ஸை கைகளால் நொறுக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் பொடித்த வேர்க்கடலை, தேன், தேங்காய்ப் பொடி, வெண்ணெய், பனஞ்சர்க்கரை கலவை சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் இந்தச் சத்துருண்டைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். பாதாம் பவுடருக்குப் பதில் பால் பவுடர் சேர்க்கலாம். இரண்டு சொட்டு வெனிலா எசென்ஸ் சேர்த்தால், மணம் கூடுதலாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT