Published : 12 Jan 2020 11:16 AM
Last Updated : 12 Jan 2020 11:16 AM

புதுமைப் பொங்கல்: பதிர் பேணி

படங்கள்: பு.க.பிரவீண்

தமிழர்களின் பெரும்பாலான திருவிழாக்கள் பொருள்பொதிந்தவை. உழவுக்கும் அது சிறக்கக் காரணமாக இருக்கும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துவிதமாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் அவற்றில் முக்கியமானது. அந்தப் பருவத்தில் விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் படையலிடுவது பொங்கல் கொண்டாட்டத்தில் முதன்மையானது. வளர்ச்சியின் பெயரால் உழவுத்தொழிலின் எல்லை குறுக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து, பொங்கல் கொண்டாட்டத்தின் மகத்துவத்தைப் பலர் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டுப் பொங்கலைப் புதுமையும் பாரம்பரியமும் இணைந்ததாக மாற்ற பொங்கல் சிறப்பு உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.

பதிர் பேணி

என்னென்ன தேவை?
மைதா - 2 கப்
வெண்ணெய் - கால் கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - சிட்டிகை
அரிசி மாவு - 4
பொடித்த சர்க்கரை - கால் கப்
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சுத்தமான தட்டு ஒன்றில் வெண்ணெய் சேர்த்து உள்ளங்கையால் நுரை வரும்வரை வெண்ணெய்யைத் தேய்க்க வேண்டும். இத்துடன் அரிசி மாவை நன்றாகக் கலந்து கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இதன் பெயர் ‘பதிர்’ இப்போது மைதாவுடன் சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள். பின்னர் மைதாவைச் சிறு உருண்டைகளாக எடுத்து மெல்லியதாகத் திரட்டுங்கள். இதுபோல் இரண்டு மைதா உருண்டைகளைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதன் மேல் ஏற்கெனவே செய்துவைத்த பதிரை ஒரு டீஸ்பூன் எடுத்துப் பரவலாகத் தடவுங்கள். அதன் மேல் மற்றொரு மைதாவை வையுங்கள். இதேபோல் நான்கு அடுக்குகளை ஒன்றன்மீது ஒன்றுவைத்து சிறு பாய் போல் சுருட்டிக்கொள்ளுங்கள். இதைக் கத்தியால் சிறு உருண்டைகளாக வெட்டி அதை அதிகம் அழுத்தாமல் மீண்டும் திரட்டுங்கள். இப்போது வாணலியில் எண்ணெய் சூடானதும் இந்த அப்பளங்களைப் போட்டு மொறு மொறுவெனப் பொரித்தெடுங்கள். பொரித்தெடுத்த அப்பளம் சூடாக இருக்கும்போதே ஏலக்காய்த் தூள், பொடித்த சர்க்கரை தூவி தட்டில் அடுக்கிவையுங்கள். சூடு ஆறிய பிறகு காற்றுபுகாத டப்பாவில் போட்டு விரும்பும்போது ருசியுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x