Published : 20 Nov 2019 03:20 PM
Last Updated : 20 Nov 2019 03:20 PM
வீட்டில் எவ்வளவுதான் ருசியாகச் சமைத்தாலும் கோயிலில் தரப்படும் பிரசாதத்துக்குத் தனிச்சுவை உண்டு. சிறியதே அழகு என்பதுபோல் கொஞ்சமாகத் தரப்படுவதாலோ என்னவோ அதன் சுவை ஈடு இணையில்லாததாக இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பிரசாதம் பிரசித்தமாக இருக்கும். வட இந்தியாவில் பூரி ஜெகநாதர் கோயிலுக்கும் அப்படிப் பிரசித்தமான பிரசாதங்கள் நிறைய உண்டு.
அங்கே தினமும் 100 வகையான நைவேத்யங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆறு கால பூஜையின்போது அவை படையலிடப்படு கின்றன. ஜெகநாதரைத் தரிசித்த தோடு அங்கு படையலிடப்படும் நிவேதனங்களின் செய்முறை யையும் அறிந்துகொண்டு வந்திருக்கிறார் சென்னை வாசகி ராஜகுமாரி. “கோயிலின் சுவையை முழுவதுமாக வீட்டில் பெற முடியாது என்றாலும் முயன்று பார்க்கலாமே” என்று சொல்லும் அவர், அவற்றில் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார். ஜெகநாதர் கோயிலில் எண்ணெய்க்குப் பதில் நெய்யைத்தான் பயன்படுத்து கிறார்கள். கறிவேப்பி லையைப் பயன்படுத்துவதில்லை.
சப்டாபூரி
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர்
கோதுமை மாவு - 6 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
துருவிய வெல்லம் - கால் கப்
நெய் - 10 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். பால் கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மேலே வரும் பாலாடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடுங்கள். 1 லிட்டர் பால் கால் லிட்டராகக் குறுகியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
பால், பாலாடை, கோதுமை மாவு, ஏலப்பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசையுங்கள். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. பிசைந்த மாவை அதிரசம் போல மெலிதாகத் தட்டி, தோசைக்கல்லில் போடுங்கள். சுற்றிலும் நெய் விட்டு இருபுறங்களும் திருப்பிப்போட்டு வேகவிட்டு எடுங்கள்.
துருவிய வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். இரண்டு கொதி வந்ததும் சுட்டெடுத்தவற்றை அதில் முக்கியெடுத்துப் பரிமாறுங்கள்.
குறிப்பு: ராஜகுமாரி | தொகுப்பு: ப்ரதிமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT