Published : 03 Nov 2019 11:24 AM
Last Updated : 03 Nov 2019 11:24 AM
தொகுப்பு: ப்ரதிமா
காபி சமையல்
காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கோதுமை காபி கேக்
என்னென்ன தேவை?
கோதுமை மாவு – 1 கப்
நாட்டுச் சர்க்கரை – 1 கப்
காபித் தூள் – 20 மி.லி
கோகோ பவுடர் – 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்
பால் – தேவைக்கு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவையும் நாட்டுச் சர்க்கரையையும் நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். காபித் தூளை நான்கு டீஸ்பூன் வெந்நீரில் கலந்துகொள்ளுங்கள். காபி கலவை, கோகோ பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.
இப்போது சிறிதளவு பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மாவைக் கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள். ‘அவனை’ 350 டிகிரி வெப்பத்தில் பிரிஹீட் செய்து கலவையை ‘அவன்’ பாத்திரத்துக்கு மாற்றி 40 நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறுங்கள். இதன் மேல் சாக்லெட் சிரப் ஊற்றி அலங்கரிக்கலாம்.
- சங்கரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT