Published : 04 Aug 2019 10:27 AM
Last Updated : 04 Aug 2019 10:27 AM
தொகுப்பு: ப்ரதிமா
விதைகள் எல்லாம் விதைக்கத்தான் எனப் பலரும் நினைத்திருப்போம். சிலர் பூசணி, வெள்ளரி போன்ற தேர்ந்தெடுத்த சில வகை விதைகளை மட்டும் சமையலில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், பல வகை விதைகளில் விதவிதமாகச் சமைத்து ருசிக்கலாம் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். சில விதை உணவு வகைகளைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.
தர்பூசணி விதைப் பொடி
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தர்பூசணி விதை - கால் கப்
இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள், சீரகத் தூள் – தலா 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - கால் கப்
புதினா மயோனீஸ் செய்யத் தேவையானவை
கெட்டித் தயிர் - அரை கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை மூடி
புதினா இலை - 6
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
புதினா மயோனீஸ் செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுங்கள். உலர் பூசணி விதையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். சப்பாத்தி மாவில் பூசணி விதைப் பொடி, மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக்கொள்ளுங்கள். மாவைச் சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக் கல்லில் போட்டு லேசாக எண்ணெய் விட்டுச் சுட்டெடுங்கள். சப்பாத்தி மீது புதினா மயோனீஸ் தடவிப் பரிமாறுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT