Published : 28 Jun 2015 02:53 PM
Last Updated : 28 Jun 2015 02:53 PM
பீட்ரூட் அல்வா
என்னென்ன தேவை?
துருவிய பீட்ரூட், சர்க்கரை - தலா 1 கப்
சர்க்கரை இல்லாத கோவா - கால் கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
வறுத்த முந்திரிப் பருப்பு - 10
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்
எப்படிச் செய்வது?
துருவிய பீட்ரூட்டைப் பச்சை வாசனை போக வதக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன், கோவா, நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். கோவா இல்லையென்றால் சுண்டக் காய்ச்சிய பாலை 1 டேபிள் ஸ்பூன் அளவுக்குச் சேர்க்கலாம். மேலே முந்திரியைத் தூவிப் பரிமாறவும்.
மேகலா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT