Published : 30 Mar 2015 10:32 AM
Last Updated : 30 Mar 2015 10:32 AM
திராட்சை ஜூஸ்
என்னென்ன தேவை?
கறுப்புத் திராட்சை - 1 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
டோனோவின் எசென்ஸ் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - அரை லிட்டர்
சிட்ரிக் அமிலம் - கால் டீஸ்பூன்
சோடியம் பென்சோயேட் - கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
திராட்சையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஆறியதும் தோலுடன் மசித்து, கூழாக்கவும். கூழை அளந்து, அதற்கு இரண்டு மடங்கு அளவு சர்க்கரை, 1 மடங்கு தண்ணீர் இரண்டையும் நன்றாகக் கொதிக்கவிடவும். சிட்ரிக் அமிலம் சேர்த்து இறக்கவும். ஆறியதும் பழக் கூழுடன் கலந்து டோனோவின் எசென்ஸ், சோடியம் பென்சோயேட் (சிறிதளவு தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்) கலந்து, உலர்வான பாட்டிலில் சேர்த்து வைக்கவும். இது 3-4 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். தேவைப்படும் போது கால் டம்ளர் ஜூஸுடன் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT