Last Updated : 13 Apr, 2015 11:23 AM

 

Published : 13 Apr 2015 11:23 AM
Last Updated : 13 Apr 2015 11:23 AM

ஓலன்

ஓலன்

என்னென்ன தேவை?

சிவப்புப் பூசணி, வெள்ளைப் பூசணி - தலா 200 கிராம்

வேகவைத்த வெள்ளைக் காராமணி - 50 கிராம்

பச்சை மிளகாய் - 1

தேங்காய் எண்ணெய்

- 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சிவப்பு மற்றும் வெள்ளைப் பூசணிக் காய்களை மெல்லிய சதுர துண்டுகளாக நறுக்கவும். இவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாதி வேகும்போது கீறிய பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு வெந்தவுடன் வேகவைத்த வெள்ளைக் காராமணி சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.

பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு சீரகம், பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி இவற்றைச் சேர்த்து, நீர்விடாமல் கெட்டியாக ஒன்றிரண்டாக அரைக்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து, சூடான எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டு மிதமான சூட்டில் வேகவிட்டு எடுக்கவும். பண்டிகை நாட்களில் சிலர் வெங்காயத்தைத் தவிர்த்துவிடுவார்கள். வேண்டுமானால் நறுக்கிய புதினா, துருவிய கேரட், கோஸ் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து வடை செய்யலாம்.

படங்கள்: எல். சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x