Published : 09 Feb 2015 01:37 PM
Last Updated : 09 Feb 2015 01:37 PM
என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - கால் கப்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
நாட்டுச் சர்க்கரை - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதா மாவையும் பச்சரிசி மாவையும் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கரைக்கவும். கடலைப் பருப்பை வேக வைத்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்து பூரணம் செய்துகொள்ளவும்.
அடுப்பில் ஆப்பச் சட்டியை வைத்து அதில் ஒரு கரண்டி மாவை விட்டு ஆப்பமாக எடுக்க வேண்டும். ஆப்பத்தின் நடுவில் பூரணத்தை வைத்துச் சுருட்டி, சுருள் ஆப்பமாகப் பரிமாறவும்.
இது பெரியவர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் புத்துணர்ச்சியூட்டும் ஆரோக்கிய இனிப்பு உணவு. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்துகள் மிகுந்தது.
- எஸ். ரூபலா தாண்டன், திருவாரூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT