Published : 09 Feb 2015 01:39 PM
Last Updated : 09 Feb 2015 01:39 PM

கலக்கல் கடப்பா

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - 100 கிராம்

வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு - தலா 1

பச்சை மிளகாய் - 2

பிரிஞ்சி இலை - 1

சோம்பு - அரை டீஸ்பூன்

இஞ்சி, பட்டை - சிறு துண்டு

பூண்டு - 5 பல்

லவங்கம் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு தாளிக்க:

எப்படிச் செய்வது?

பருப்புடன் பச்சை மிளகாய், தக்காளி, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் கிழங்கை மசித்து, உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சுவையான கடப்பா தயார். இது இட்லி, சப்பாத்திக்கு ஏற்ற சத்தான தொடுகறி.

- பி. பாலா, திருவாரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x