Published : 11 Jan 2015 03:01 PM
Last Updated : 11 Jan 2015 03:01 PM

ஸ்பெஷல் வடை

ஸ்பெஷல் வடை என்னென்ன தேவை?

துவரம் பருப்பு 2 கப்

கடலை பருப்பு 1 கப்

உளுத்தம் பருப்பு முக்கால் கப்

பச்சரிசி 50 கிராம்

முந்திரி பருப்பு 25

தேங்காய்த் துருவல் (அரை மூடியில் வருவது)

காய்ந்த மிளகாய் 4 அல்லது 5

கறிவேப்பிலை சிறிது

பெருங்காயத் தூள் சிறிது

உப்பு சுவைக்கேற்ப

எண்ணெய் வடை பொரிப்பதற்கு

எப்படிச் செய்வது?

து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு, அரிசி, மு.பருப்பு, மிளகாய் ஆகியவற்றைக் கழுவி இரண்டரை மணிநேரம் நீரில் ஊறவைக்கவும். அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து இறக்கிவைத்துத் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வடையாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: விரத, பண்டிகைக் காலங்களில் பூண்டு, வெங்காயம், மசாலாப் பொருட்கள் சேர்க்கமாட்டோம் என்பவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று.

படங்கள்: க. ஸ்ரீபரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x