Last Updated : 29 Dec, 2014 10:59 AM

 

Published : 29 Dec 2014 10:59 AM
Last Updated : 29 Dec 2014 10:59 AM

பப்பாளிக்காய் பொரியல்



என்னென்ன தேவை?

பப்பாளிக்காய் (துருவியது) - 1 கப்

குடமிளகாய் 3 ( பச்சை, சிவப்பு, மஞ்சள்)

நறுக்கிய பச்சை மிளகாய் 2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் 2

தேங்காய்த் துருவல் - அரை மூடி

கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்

கடுகு, உளுந்து 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

பப்பாளிக்காயை சேமியாபோல் துருவிக் கொள்ளவும். மூன்று நிற குடமிளகாயையும் நீளவாக்கில் துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். அதில் கடலை பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். துருவிய பப்பாளிக்காய், குடமிளகாய் இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. பப்பாளிக்காய் நன்கு சுருங்கி வேகும்வரை வதக்கிக் கொண்டே இருக்கவும்.வெந்ததும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழையைச் சேர்த்து இறக்கவும்.

பப்பாளியில் வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு இவற்றுடன் நார்ச்த்துக்களும் உள்ளன.

ராஜபுஷ்பா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x