Last Updated : 29 Sep, 2014 12:52 PM

 

Published : 29 Sep 2014 12:52 PM
Last Updated : 29 Sep 2014 12:52 PM

கிரீன் ராய்த்தா

என்னென்ன தேவை?

கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

இஞ்சித் துண்டுகள் (தோல் நீக்கியது) - 2 ஸ்பூன் அளவு

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

தயிர் - 1 கப்

பெரிய நெல்லிக்காய் (விதை நீக்கியது) - 3

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள், நெல்லிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுக்கவும். தயிரில் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, அதில் அரைத்த விழுதில் கலக்கவும். கிரீன் ராய்த்தா தயார்.

குறிப்பு: வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்தது. 5 நிமிடங்களில் தயாரிக்கலாம் சாப்பாட்டுக்குச் சைடு டிஷ்ஷாகவும், சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிடவும் ஏற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x