Published : 28 Oct 2014 04:46 PM
Last Updated : 28 Oct 2014 04:46 PM
என்னென்ன தேவை?
மேல்மாவுக்கு: மைதா - 1
கப் கடலை மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - கால் கப்
புளி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
ஸ்டஃப்பிங் செய்ய:
தேங்காய்த் துருவல் - 6 டீஸ்பூன்
சர்க்கரை,
மிளகாய்த் தூள் - தலா 2 டீஸ்பூன்
கிராம்பு - 1 சோம்பு,
ஆம்சூர் பவுடர் - தலா 1 டீஸ்பூன்
கசகசா - 1 சிட்டிகை
மல்லித் தூள், சீரகத் தூள் - தலா 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மேல்மாவுக்குக் கொடுத்த பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அதனுடன் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து 20 நிமிடம் ஊறவிடவும். ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். பிசைந்த மாவைச் சிறு சப்பாத்தியாக இட்டு, மேலே புளி பேஸ்ட்டைத் தடவவும். பொடித்துவைத்திருக்கும் பொடியை அதன் மீது பரவலாகத் தூவவும். சப்பாத்தியைச் சுருட்டி, ஓரங்களை அழுத்தி மூடவும். சிறு சிறு உருளைகளாக வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மகாராஷ்ட்டிராவின் பாரம்பரிய உணவுகளில் இதுவும் ஒன்று.
குறிப்பு: ராஜகுமாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT