Last Updated : 21 Apr, 2019 10:06 AM

 

Published : 21 Apr 2019 10:06 AM
Last Updated : 21 Apr 2019 10:06 AM

வாழை சமையல்: வாழைக்காய்ப் புட்டு

என்னென்ன தேவை?

முற்றிய வாழைக்காய் – 1

வெல்லத் தூள் – அரை கப்

தேங்காய்த் துருவல் – கால் கப்

பொடியாக நறுக்கிய முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

ஏலப் பொடி, பட்டைப் பொடி, சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாழைக்காயைத் தோலுடன் இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் குழையாமல் வேகவையுங்கள். வெந்ததும் எடுத்துத் தோலை நீக்கிவிடுங்கள். அதைப் பெரிய துருவியில் துருவிக்கொள்ளுங்கள். வாழைக்காய் துருவலில் சிறிதளவு நெய்யை ஊற்றுங்கள். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலப் பொடி, பட்டைப் பொடி, சுக்குப் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். சில நிமிடங்களில் செய்துவிடக்கூடிய புட்டு இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x