Last Updated : 17 Mar, 2019 01:10 PM

 

Published : 17 Mar 2019 01:10 PM
Last Updated : 17 Mar 2019 01:10 PM

திருமண விருந்து: அபூர்வ ரூபா (டெல்லி)

என்னென்ன தேவை?

மைதா, கெட்டித் தயிர் – தலா அரை கப்

சமையல் சோடா – கால் டீஸ்பூன்

சர்க்கரை – 1 கப்

தண்ணீர் – அரை கப்

எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன்

பாதாம் சீவல் – 4 டீஸ்பூன்

நெய் – பொரிக்கத் தேவையான அளவு

ரோஸ் எசென்ஸ் – சில துளிகள்

பால்கோவா – கால் கப்

எப்படிச் செய்வது?

மைதாவுடன் தயிர், சோடா, சோம்புத் தூள் ஆகியவற்றைக் கலந்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையோடு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வையுங்கள். ஒரு கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். ரோஸ் எசென்ஸ்ஸையும் எலுமிச்சைச் சாற்றையும் சேருங்கள். பால்கோவாவை உருண்டைகளாகப் பிடியுங்கள்.

நெய்யைக் குறைவான சூட்டில் அடுப்பில் வையுங்கள். கோவா உருண்டைகளை மைதா மாவில் முக்கியெடுத்து நெய்யில் போட்டுப் பொரியுங்கள். பொரித்தவற்றைச் சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து தட்டில் பரவலாக வைத்து, பாதாம் சீவலைத் தூவிப் பரிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x