Published : 24 Feb 2019 05:58 PM
Last Updated : 24 Feb 2019 05:58 PM
என்னென்ன தேவை?
சேப்பங்கிழங்கு – கால் கிலோ
மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
அரிசி மாவு அல்லது சோள மாவு – 2 டீஸ்பூன்
புளிக் கரைசல் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சேப்பங்கிழங்கைப் புளித் தண்ணீரில் உப்பு சேர்த்து முக்கால் பதத்துக்கு வேகவையுங்கள். ஆறியதும் தோல் நீக்கி வட்ட வடிவில் நறுக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சி - பூண்டு விழுது, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி ஊறவிடுங்கள். 15 நிமிடம் கழித்து தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு ஊறிய சேப்பங்கிழங்கைப் போட்டு இருபுறமும் முறுகலாக மாறியதும் எடுத்துவிடுங்கள். சேப்பங்கிழங்கு பிடிக்காதவர்கள்கூட இந்த வறுவலை விரும்பிச் சாப்பிடுவார்கள். பெருங்காயம், மிளகு சேர்த்தும் இதைச் செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT