Last Updated : 14 Jan, 2019 12:34 PM

 

Published : 14 Jan 2019 12:34 PM
Last Updated : 14 Jan 2019 12:34 PM

பொங்கல் படையல்: கத்தரி-மொச்சை தேங்காய்க் கூட்டு

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் - முக்கால் கப்

வேகவைத்த பச்சை மொச்சை – அரை கப்

வேகவைத்த துவரம் பருப்பு – கால் கப்

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

சீரகம் - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா முக்கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை - 1 கொத்து

எப்படிச் செய்வது?

தேங்காயுடன் சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துத் தனியே வையுங்கள். கத்தரிக்காயுடன் தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள். மொச்சை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கிளறி, கொதிக்கவிடுங்கள். கூட்டு சேர்ந்துவரும்போது அரைத்த தேங்காய்-சீரகக் கலவையைப் போட்டு நன்றாகக் கிளறிவிடுங்கள். கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டிக் கிளறி இறக்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x