Published : 22 Sep 2014 04:52 PM
Last Updated : 22 Sep 2014 04:52 PM

பலாப்பழ பால் அல்வா

பாலில் பால்கோவா மட்டுமல்ல, அல்வாவும் செய்யலாம் என்கிறார் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த இந்திராணி பொன்னுசாமி. பலாப்பழத்தின் துணையோடு பால் அல்வா செய்யக் கற்றுத் தருகிறார் இவர்.

என்னென்ன தேவை?

நறுக்கிய பலாப்பழத் துண்டுகள் - 2 கப்

கோதுமை மாவு - 1 கப்

சர்க்கரை - 2 கப்

பால் - 2 கப்

முந்திரி துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

நெய் -2 டேபிள் ஸ்பூன்

சமையல் எண்ணெய் - அரை கப்

கேசரி பவுடர் - 1 சிட்டிகை

எப்படிச் செய்வது?

ஒரு கப் பாலில் பலாத் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை நன்கு வறுக்கவும். முந்திரியையும் பொன்நிறமாக வறுத்து எடுக்கவும். ஒரு வாணலியில் மீதமுள்ள பால், பலா விழுது, கோதுமை மாவு, சர்க்கரை, சமையல் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

சர்க்கரை கரைந்து எல்லாமாகச் சேர்ந்து அல்வா பதம் வரும்போது கேசரி பவுடரைச் சிறிதளவு பாலில் கரைத்து ஊற்றவும். முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். சுவையான பலாப்பழ அல்வா தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x