Published : 22 Sep 2014 05:09 PM
Last Updated : 22 Sep 2014 05:09 PM

வேர்க்கடலை குலாப் ஜாமுன்

என்னென்ன தேவை?

பச்சை வேர்க்கடலை - 1 கப், துருவிய பனீர் - அரை கப், சர்க்கரை - 1 கப், நெய் - பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். அரைத்த வேர்க்கடலை விழுதுடன் துருவிய பனீரைச் சேர்த்துப் பிசையவும். உருண்டைகளாக உருட்டி, நெய்யைக் காயவைத்து, அதில் போட்டு குறைந்த தீயில் பொரிக்கவும். சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பிசுக்குப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். பொரித்த ஜாமுன்களை பாகில் போட்டு ஊறவைத்து பரிமாறவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x