Last Updated : 04 Aug, 2014 07:08 PM

 

Published : 04 Aug 2014 07:08 PM
Last Updated : 04 Aug 2014 07:08 PM

பச்சை பயறு புலவ்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சை பயறு - 100 கிராம்

பாசுமதி அரிசி - 200 கிராம்

தக்காளி - 2

வெங்காயம் - 1

துருவிய இஞ்சி - பூண்டு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

தனியாத் தூள், சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன்

லவங்கம் - 2

ஏலக்காய் - 2

பட்டை - சிறு துண்டு

மராட்டி மொக்கு - 1

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் வெண்ணெய், சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். துருவிய இஞ்சி - பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். முளைவிட்ட பச்சைப் பயறு சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு ஊறவைத்த பாசுமதி அரிசி, தேவையான உப்பு சேர்த்து மூடவும். 2 விசில் வந்ததும் இறக்கிவைக்கவும். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து கிளறி, தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

குறிப்பு- லட்சுமி சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x