Last Updated : 18 Feb, 2018 12:13 PM

 

Published : 18 Feb 2018 12:13 PM
Last Updated : 18 Feb 2018 12:13 PM

வகை வகையா செய்யலாம் வாழைக்காய் சமையல்: புட்டு

என்னென்ன தேவை?

வாழைக்காய் - 1, அரிந்த வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - கால் கப், எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கடலை, உளுத்தம் பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

வாழைக்காயைத் தோல் சீவாமல் மூன்று துண்டுகளாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள். வாழைக்காய் வெந்ததும் தோலை உரித்துவிட்டுச் சீவிக்கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளியுங்கள்.

பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். நன்றாக வதங்கியதும் துருவி வைத்துள்ள வாழைக்காய், தேங்காய்த் துருவல் இரண்டையும் சேர்த்து வதக்குங்கள். மசாலாவுடன் வாழைக்காய் நன்றாகக் கலந்ததும் இறக்கிவைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x