Published : 17 Dec 2017 10:40 AM
Last Updated : 17 Dec 2017 10:40 AM

மணக்கும் நெல்லை! - கூட்டாஞ்சோறு

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்

துவரம் பருப்பு - முக்கால் கப்

பெருங்காயப் பொடி - அரை டீ ஸ்பூன்

சேனைக் கிழங்கு

(கருணைக் கிழங்கு) - 50 கிராம்

வாழைக்காய், கேரட், உருளைக் கிழங்கு, முருங்கைக் காய் - தலா 1

கொத்தவரங்காய் - 10

பீன்ஸ், அவரைக்காய் - தலா 5

சுரைக்காய் - 50 கிராம்

கத்தரிக்காய் - 4

முருங்கைக் கீரை, அரைக் கீரை

(நறுக்கியது) - தலா 1 கப்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

உப்பு - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி

- தலா அரை டீ ஸ்பூன்

அரைக்கத் தேவையானவை

சீரகம் - 50 கிராம்

பூண்டு - 2

மிளகாய் வற்றல் - 7

தேங்காய்த் துருவல் - அரை கப்

சின்ன வெங்காயம் - 2

எப்படிச் செய்வது?

சீரகம், பூண்டு, மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள். புளியைத் தனியாகக் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். துவரம் பருப்பைப் பத்து நிமிடம் ஊறவைத்துப் பின்னர் கொதிக்க வையுங்கள். பாதி வெந்தவுடன் சேனைக் கிழங்கைத் துண்டுகளாக்கிச் சேர்க்க வேண்டும். அதேபோல் மற்ற காய்கறிகளையும் சேர்த்துவிடுங்கள். வெங்காயத்தை இரண்டு சிறிய பச்சை மிளகாயுடன் சேர்த்துச் சிறிது எண்ணெய்யில் வதக்கி முருங்கைக்காய், கீரை வகைகளைச் சேருங்கள்.

அரிசியைக் கழுவி பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதில் இவற்றைச் சேர்த்துவிடுங்கள். தண்ணீரில் தானாக மூழ்கும்வரை இதை குக்கரில் வைத்து மூடிவையுங்கள். கரைத்துவைத்துள்ள புளியில் அரைத்துவைத்துள்ள மசாலா விழுது, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர், இதை குக்கரில் வெந்துகொண்டிருக்கும் அரிசி, காய்கறிகளுடன் சேர்த்து நன்றாகக் கிளறி வேகவிடுங்கள்.

தண்ணீர் சுண்டி கெட்டியானவுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டிக் கிளறி, குக்கரை மூடி அடுப்பின் சூட்டைக் குறைவாக வைக்க வேண்டும். மூன்று நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து தேவைப்பட்டால் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கிவிடலாம்.

அப்பளம், பப்படம், கூழ் வற்றல் ஆகியவற்றைத் தொட்டுக்கொண்டு இதைச் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x