Published : 22 Jul 2014 12:34 PM
Last Updated : 22 Jul 2014 12:34 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளதால், தேங்காய் தட்டுபாடின்றி கிடைக்கும். அதனால் சமையலில் தேங்காயின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். தேங்காய்ப்பால் சாதம், இம்மாவட்ட மக்களின் ஸ்பெஷல் உணவு. அதைச் செய்யக் கற்றுத்தருகிறார் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த எம். மாரிச்செல்வி.
என்னென்ன தேவை?
அரிசி - 2 கப், தேங்காய்ப் பால் - 4 கப், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன், பட்டை - 3, லவங்கம் - 5, ஏலக்காய் - 3, பிரியாணி இலை - 2, கறிமசால் பொடி - கால் டீஸ்பூன், முந்திரி - 50 கிராம், நெய் - 100 கிராம், புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
தேங்காயை அரைத்துப் பால் எடுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும். இப்போது அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும். கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் கலந்த சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT