Published : 19 May 2023 08:48 AM
Last Updated : 19 May 2023 08:48 AM

Modern Love Chennai: ஆறு ஆக்கங்களில் அதிகம் ஈர்ப்பது எது? - ஒரு விரைவுப் பார்வை

லாலாகுண்டா பொம்மைகள்: ஒரு அழுத்தமான கதைப் பின்னணியை எடுத்துக் கொண்டு அதை சோகத்தைப் பிழியாமல் கலகலப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் ராஜுமுருகன் ஈர்க்கிறார். காதல் தோல்வியை காட்சிப்படுத்துகிறேன் என்ற பெயரில் பார்ப்பவர்களை படுத்தி எடுக்காமல் கலகலப்பாகவும், அதே நேரம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் கதையை சொன்ன வகையில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன். | விரிவாக வாசிக்க > மாடர்ன் லவ்: சென்னை Review | லாலாகுண்டா பொம்மைகள்

இமைகள்: ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ என அழுத்தமான படங்களை இயக்கி, பிறகு நடிப்பில் கவனம் செலுத்திவந்த பாலாஜி சக்திவேல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநராக களமிறங்கியிருக்கும் படம். கண் பார்வை கோளாறு என்பதை ஒரே விபத்தில் நடக்கும் பிரச்சினையாக சொல்லி சோகத்தை பிழியாமல் இயல்பான காட்சிகளின் மூலம் நகர்த்தியுள்ளார். சற்று பிசகினாலும் ஒரு மெகா சீரியல் பார்க்கும் உணர்வைத் தந்துவிடக் கூடிய ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு நுணுக்கமான காட்சிகளின் மூலம் ஒரு உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். | விரிவாக வாசிக்க > மாடர்ன் லவ்: சென்னை Review | இமைகள்

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி: காதலை தேடித் திரியும் பெண்ணின் பார்வையிலிருந்து பேசும் ‘ஓம் ஷாந்தி ஒஷானா’ டைப் கதை. எனினும் ஒரு திரைப்படத்துக்கு தேவையான அழுத்தமான பாத்திரப் படைப்புகளோ, திரைக்கதையோ இல்லாமல் தனித் தனி காட்சிகளின் தொகுப்பு போல நகர்கிறது. ஒரு சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு முழு படமாக ஈர்க்க தவறுகிறது. | விரிவாக வாசிக்க > மாடர்ன் லவ்: சென்னை Review | காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி

மார்கழி: கனவுகளை களவாடி, உள்ளூணர்வில் மின்சாரம் பரவும் பதின்பருவக் காதல் நாயகிக்கு ஏற்படுத்த மாற்றங்கள் இறுதியில் என்னவாகிறது என்பதற்கான விடையே 'மார்கழி'. இந்தத் திரைப்படம், பதின்பருவத்தில் பலரும் கடந்துவரும் ஒரு மெல்லிய உணர்வுதான். அந்த மென்மையை இந்த திரைப்படம் நிறைவாகவே தந்திருக்கிறது. செயின்ட் தாமஸ் மவுன்ட்டின் உச்சயில் அமர்ந்தபடி சென்னையை பார்த்துக்கொண்டே பெற்ற முதல் முத்தத்தின் ஈரம்தான் இந்த 'மார்கழி' | விரிவாக வாசிக்க > மாடர்ன் லவ்: சென்னை Review | மார்கழி

பறவை கூட்டில் வாழும் மான்கள்: காதல் படங்களையும், கிராமத்து வாழ்வியலையும் இயக்குவதில் வல்லவர் இயக்குநர் பாரதிராஜா. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவும் அவரும் ஒன்றிணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் இறுதியில் மறைந்த இயக்குநரும், அவரது நண்பருமான பாலுமகேந்திரா நினைவுகூரப்படுகிறார். அவரது கேமராவிலிருந்து கதை சொல்லியிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படியொரு உணர்வைத்தான் இந்தப் படம் தந்திருக்கிறது | விரிவாக வாசிக்க > மாடர்ன் லவ்: சென்னை Review | பறவை கூட்டில் வாழும் மான்கள்

நினைவோ ஒரு பறவை: தியாகராஜன் குமாரராஜாவின் இன்டலக்சுவலிஸம் ஒரு எக்ஸ்ட்ரீம் என்றால், ஜோசியம் இன்னொரு எக்ஸ்ட்ரீம், இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கு இடையே நகரும் இந்தப்படம் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான ஒருவகை ஊசலாட்டத்தை கொடுக்கிறது. படத்தின் டெக்னீஷியன்களிடம் இருந்து அற்புதமான உழைப்பை பெற்ற இயக்குநர் தனது எழுத்திலும் பிரதிபலித்திருந்தால், இந்த 'நினைவோ ஒரு பறவை' பார்வையாளர்களின் மனங்களில் இருந்து நீக்கமற நிறைந்திருக்கும் | விரிவாக வாசிக்க > மாடர்ன் லவ்: சென்னை Review | நினைவோ ஒரு பறவை



நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இப்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x