Published : 06 Apr 2025 07:49 AM
Last Updated : 06 Apr 2025 07:49 AM
பள்ளிப் பருவத்தில் கதாநாயகி எழுதி வைத்த ‘The life list', அதாவது தன்னுடைய மகளின் சிறு வயது அபிலாஷைகளின் பட்டியலைத் தூசுதட்டுகிறார் அம்மா! இறக்கும் நாள் தெரிந்துவிட்ட வெற்றிகரமான தொழில் அதிபர் அவர்.
இன்று இளமையின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் மகளைத் தனியாக, அவள் மேற்கொள்ள விரும்பிய அந்தப் பால்ய ‘பக்கெட் லிஸ்ட்’ பயணத்தை மேற்கொள்ள அனுப்புகிறார். நாயகிக்கோ இப்போது தனியாகப் பயணம் செய்ய விருப்பம் இல்லை. ஆனால், ‘நீ இந்தப் பயணத்தை மேற்கொண்டால், உன் வாழ்க்கையில் நீ எதிர்பார்க்காத ஒன்று உனக்குக் கிடைக்கும்’ என்று சொல்லிய பின் கண் மூடிவிடுகிறார்.
அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற மகளின் பயணம் தொடங்குகிறது. பயணம் என்பதே எதிர்பாராமைகளின் ஓட்டம்தானே! நம் கதாநாயகியின் பயணத்திலும் அவை வரிசை கட்டுகின்றன. அந்தப் பயணத்தில் அவளுக்குள் இருந்த காதல் பூக்கிறது, தன் குடும்பத்தின் பல ரகசியங்கள் கட்டுடை கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாக அவளை அவளே கண்டறிகிறாள். பணத்தின் பின்னாலும் பணியின் பின்னாலும் ஓடுவதல்ல வாழ்க்கை; நமக்குப் பிடித்த சின்ன சின்ன விஷயங்களையும் அவற்றுக்கு மத்தியில் செய்து மகிழ்ச்சியை மனம் முழுக்க நிரப்பிக் கொள்வது என்பதை ஆடம் புரூக்ஸின் கவித்துவமான எழுத்தும் இயக்கமும் நமக்குக் கொடுத்தனுப்புகின்றன. அலெக்ஸ் ஆக வரும் சோபியா கார்சன் அழகுணர்ச்சி மிக்க நடிப்பால் கவர்ந்துவிடுகிறார். இரண்டு மணி நேரம் ஓடும் ‘தி லைஃப் லிஸ்ட்’ திரைப்படம், நெட்ஃபிளிக்ஸில் கடந்த வெள்ளியன்று வெளியாகியிருக்கிறது. வீட்டி லுள்ள சிறார்களுடன் காண வேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment