Published : 22 Dec 2024 06:40 AM
Last Updated : 22 Dec 2024 06:40 AM

One Hundred Years of Solitude: தனிமையின் 100 ஆண்டுகள்! | ஓடிடி திரைப் பார்வை

இருபதாம் நூற்றாண்டில் உலகின் பல மொழிகளில் நவீன இலக்கியம் தாக்கம் பெற்றுக்கொண்ட ஒரு கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ். ஸ்பானிய மொழியில் அவர் எழுதிய ‘தனிமையின் 100 ஆண்டுகள்’ நாவல், அவரது தனித்துவ மொழியாலும் கதை கூறும் உத்தியாலும் உலகப் புகழ்பெற்று கோடிக்கணக்கான மொழி கடந்த வாசகர்களைச் சென்றடைந்தது.

மகோந்தா என்கிற சதுப்புநிலக் கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. அந்த நகரத்தில் வாழும் நாவலின் நாயகன் புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகளின் கதை இப்போது சிலிர்ப்பூட்டும் இணையத் தொடராகியிருக்கிறது.

காலத்தைக் காட்சிகளுக்குள் கொண்டுவரும் உருவாக்கம், நடிகர்கள் தேர்வு, நடிப்பு ஆகியவற்றுடன் நாவலின் உணர்வை அப்படியே காட்சிகளில் நிறைத்தது என அசரடிக்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘One hundred years of solitude' இணையத் தொடர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x