Published : 27 Apr 2023 06:15 PM
Last Updated : 27 Apr 2023 06:15 PM

ஓடிடியில் ‘விடுதலை பாகம் 1’ - படக்குழுவின் புது உத்தியில் என்ன ஸ்பெஷல்?

வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ படம் நாளை (ஏப்ரல் 28) ஓடிடியில் வெளியாகிறது. இதில் திரையரங்குகளில் படம் பார்த்தவர்களை ஓடிடியிலும் படம் பார்க்க வைக்க படக்குழு புது உத்தியை கையாண்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை பாகம் 1’. பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, சேத்தன், தமிழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் மற்றும் க்ராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில், ‘ஒன்னோட நடந்தா’, ‘வழி நெடுக காட்டுமல்லி’ ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட்டடித்தன.

இந்நிலையில், படம் நாளை (ஏப்ரல் 28) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பில் ‘டைரக்டர்ஸ் கட் எக்ஸ்டன் வெர்ஷன்’ (extended version of ViduthalaiPart1 Director’s cut) என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திரையரங்குகளில் வெளிவராத காட்சிகள் ஓடிடி வெர்ஷனில் வெளியாக இருக்கிறது. திரையரங்குகளில் படம் பார்த்தவர்களை ஓடிடியில் கூடுதல் காட்சிகளைப் பார்க்க வைக்க இந்த உத்தி கையாளப்பட்டுள்ளது. இதனால் ஓடிடிக்கான வியூஸ் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x