Published : 14 Dec 2021 03:13 PM
Last Updated : 14 Dec 2021 03:13 PM
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் தனது மாதாந்திர கட்டணங்களை அதிரடியாக குறைத்துள்ளது.
கரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் உலகம் முழுவதும் மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் படம், வெப் சீரிஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. புதிய ஓடிடி தளங்களில் வருகையும் அதிகமானது. ஓடிடி தளங்களில் உலகம் முழுவதும் அதிக சந்தாதாரர்களைக் கொண்டு முதலிடத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளம் இருந்து வருகிறது.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸுக்கு அடுத்த இடத்தில் 17 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் அமேசான் ப்ரைம் உள்ளது.
பொதுவாக மற்ற ஓடிடி தளங்களோடு ஒப்பிடுகையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறப்படுவதுண்டு. மற்ற தளங்களில் சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மாதம் 800 அடிப்படையில் கட்டணம் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் தனது மாதாந்திர கட்டணங்களை அதிரடியாக குறைத்துள்ளது. அந்த வகையில் இதுவரை ரூ.200 இருந்து வந்த மொபைல் ப்ளான் கட்டணும் தற்போது ரூ. 149 என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளானை ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டும் மொபைல் அல்லது டேப்லட்டில் பயன்படுத்த இயலும். அதே போல மாதம் ரூ.499 கட்டணம் வசூலிக்கப்பட்ட பேசிக் ப்ளான் தற்போது ரூ.199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.649 ஆக இருந்த ஸ்டாண்டர்ட் ப்ளான் ரூ.499 ஆகவும், ரூ.799 ஆக இருந்த ப்ரீமியம் ப்ளான் ரூ.649 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸின் இந்த அதிரடி கட்டணக் குறைப்பு சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT