Published : 30 Dec 2024 10:52 PM
Last Updated : 30 Dec 2024 10:52 PM

93 நாடுகளில் முதலிடம் - நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டிங்கில் வரலாறு படைத்த ‘ஸ்குவிட் கேம் 2’

நெட்ஃப்ளிக்ஸில் தற்போது வெளியாகியுள்ள ’ஸ்குவிட் கேம்’ சீசன் 2 வெப் தொடர் 93 நாடுகளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய இணைய தொடரான 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது

ந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாம் சீசன் கடந்த டிச.26 வெளியானது. இதன் 3-வது மற்றும் இறுதி சீசன் வரும் 2025-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’ஸ்குவிட் கேம்’ சீசன் 2 நெட்ஃப்ளிக்ஸில் வெளியான 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 93 நாடுகளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் வரலாற்றில் அதிக நாடுகளில் முதலிடம் பிடித்த முதல் வெப் தொடர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளது.

வாசிக்க > Squid Game 2 விமர்சனம்: பரபரக்கும் ‘குருதி ஆட்டம்’ நிறைவு தந்ததா?

ஸ்க்விட் கேம் சீசன் 1 இதுவரை 265.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தோராயமாக 2.2 பில்லியன் மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீசனின் பார்வை கணக்கை நெட்ஃப்ளிக்ஸ் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் முதல் சீசனின் சாதனையை இது சுலபமாக முறியடித்து விடும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x