Published : 05 Oct 2024 03:53 PM
Last Updated : 05 Oct 2024 03:53 PM

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ அக்.11-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘சர்ஃபிரா’ திரைப்படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் இந்தியில் ‘சர்ஃபிரா’ (Sarfira) என்ற பெயரில் ரீமேக் ஆனது. அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்தை இந்தியிலும் சுதா கொங்கராவே இயக்கினார். கடந்த ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக முதல் நாளில் படம் வெறும் ரூ.2.5 கோடியை மட்டுமே வசூலித்தது.

கடந்த 15 ஆண்டுகளில் அக்‌ஷய் குமாரின் குறைந்தபட்ச ஓப்பனிங் வசூல் இது. படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என கூறப்படும் நிலையில் மொத்தமாக ரூ.20 கோடியை மட்டுமே படம் வசூலித்தது. திரையரங்குகளில் படம் வரவேற்பை பெறாததால் 2 மாதமாக ஓடிடி விற்பனை மந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஒருவழியாக படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x