Published : 20 Nov 2023 10:50 AM
Last Updated : 20 Nov 2023 10:50 AM
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் படம் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் படங்களில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையுடன், தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்த 3-ஆவது படம் என்ற அடையாளத்தையும் ‘லியோ’ பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘லியோ’ திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாகவே சப்டைட்டிலுடன் கூடிய ஹெச்டி பிரிண்ட் பைரசியில் வெளியானது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The wait is finally over!! We have some Bloody Sweet news for you. Naa Ready! Are you?#Leo is coming to Netflix on 24th Nov in India and 28th Nov Globally in Tamil, Telugu, Malayalam, Kannada & Hindi. pic.twitter.com/zkiPFmGRaJ
— Netflix India South (@Netflix_INSouth) November 20, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT