Published : 27 Jul 2023 10:49 AM
Last Updated : 27 Jul 2023 10:49 AM
ஜானி டெப் - ஆம்பர் ஹேர்ட் இடையிலான வழக்கு விசாரணையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘Depp v Heard’ ஆவனத் தொடரின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில்தான் ஜானி டெப் தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்ததோடு, நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தார். தனது பெயருக்கு களங்கம் விளைவுக்கும் வகையில் ஆம்பர் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக கூறி ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதராமற்றவை என கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பியதற்காக ஆம்பர் அவரது முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு இழப்பீடாக 10 மில்லியன் டாலரும், அபராதமாக 5 மில்லியன் டாலரும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. இறுதியில் ஜானி டெப்புக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக கொடுத்து மொத்த வழக்கையும் முடித்துகொள்வதாக மனைவி ஆம்பர் ஹேர்ட் அறிவித்தார்.
ஆறு வாரங்கள் நடந்த இந்த வழக்கை உலகமே நேரடி ஒளிபரப்பில் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. ஜானி டெப் மீது குற்றமில்லை என்று தீர்ப்பு வந்ததும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து ‘Depp v Heard’ என்ற ஆவணத் தொடர் (Docuseries) ஒன்றை ஃநெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியாகவுள்ள இத்தொடரின் ட்ரெயலர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: ட்ரெய்லரின் தொடக்கத்தில் ஜானி டெப், ஆம்பர் ஹேர்ட் இருவரும் தங்களுடைய வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்கின்றனர். ஆம்பர் சொல்லும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜானி டெப் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் குற்றவாளியாக பார்க்கப்படுகிறது. பின்னர் வழக்கு விசாரணையின் போக்கு மெல்ல ஆம்பர் ஹேர்டுக்கு எதிராக திரும்புகிறது. வழக்கு குறித்தும் வெளி உலகிலும் சமூக வலைதளங்களிலும் இந்த வழக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் இந்த ஆவணத் தொடர் ஆழமாக பேசும் என்பதை ட்ரெய்லரின் உணர முடிகிறது.
Depp v Heard ட்ரெய்லர் வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT