Published : 27 Jun 2023 01:44 PM
Last Updated : 27 Jun 2023 01:44 PM

ஜூலை 6ம் தேதி வெளியாகிறது லட்சுமி, மதுபாலா நடிக்கும் வெப் தொடர் ‘ஸ்வீட் காரம் காபி’

சென்னை: லட்சுமி, மதுபாலா நடிக்கும் ‘ஸ்வீட் காரம் காபி’ வெப் தொடர் வரும் ஜூலை 6ஆம் தேதி அமேசான் ப்ரைம் வெப் தொடரில் வெளியாகவுள்ளது.

லயன் டூத் ஸ்டூடியோஸ் சார்பில் ரேஷ்மா கட்டாலா தயாரித்துள்ள புதிய வெப் தொடர் ‘ஸ்வீட் காரம் காபி'. பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் உள்ளிட்ட மூன்று இயக்குநர்கள் இத்தொடரை இயக்கியுள்ளனர்.

மதுபாலா, லக்‌ஷ்மி, சாந்தி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்தொடர் தமிழில் உருவாகி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகிறது. வரும் ஜூலை 6ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகிறது.

எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடர், மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது மனநிலை குறித்து அலசுகிறது. இத்தொடர் குறித்து தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலா கூறியதாவது: ‘ஸ்வீட் காரம் காபி’ தொடர் ஒரு குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது. மூன்று வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள் குறித்து பேசும் இத்தொடரை பிஜாய், கிருஷ்ணா மற்றும் சுவாதி ஆகியோர் மிக அழகாக இயக்கியுள்ளனர். லட்சுமி, மது மற்றும் சாந்தி ஆகியோரின் உற்சாகமான நடிப்பு இந்தத் தொடரை முழுமையாக ரசிக்க வைக்கும். இவவாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x