Published : 26 Jan 2023 06:41 PM
Last Updated : 26 Jan 2023 06:41 PM
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘பதான்’ திரைப்படத்தை திரையரங்குகளில் காணலாம். வினோத் கிஷன், கௌரி ஜி கிஷன், சச்சின், ரோகினி, நடித்துள்ள ‘பிகினிங்’ படமும், மம்முட்டியின், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தவிர, மோகன்லாலின் ‘அலோன்’, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளியின் ‘தங்கம்’ மலையாள படங்கள் இன்று வெளியாக திரையரங்குகளில் காணக்கிடைக்கிறது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய
‘காந்தி கோட்சே - ஏக் யூத்’ (Gandhi Godse - Ek Yudh) இந்தி படத்தை திரையரங்குகளில் காண முடியும்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ஹாலிவுட் படங்களான ‘யூ பிபூள்’ (You People) நெட்ஃப்ளிக்ஸிலும், ‘சார்மிங் தி ஹார்ட்ஸ் ஆஃப் மென்’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ரவிதேஜா நடிப்பில் உருவான ‘தமாகா’ படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. நிவின்பாலி, மாளவிகா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘சாட்டர்டே நைட்’ படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை (ஜனவரி 27) காணக்கிடைக்கும்.
இணையத்தொடர்கள்: அபி நட்சத்திரம், அனுமோல், மதன், லிங்கா, சிங்கம்புலி நடிப்பில் முத்துகுமார் இயக்கத்தில் ‘அயலி’ வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ள ‘எங்க ஹாஸ்டல்’ வெப்சீரிஸ் நாளை (ஜனவரி 27) அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment