Published : 14 Dec 2022 04:53 PM
Last Updated : 14 Dec 2022 04:53 PM

2022-ன் டாப் 10 இந்திய வெப் சீரிஸ் - ஐஎம்டிபி பட்டியலில் ‘பஞ்சாயத்’ முதலிடம்

2022-ம் ஆண்டு ரேட்டிங் அடிப்படையில் டாப் 10 இந்திய வெப் சீரிஸ் பட்டியலை ஐஎம்டிபி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ‘பஞ்சாயத்’ முதலிடம் பெற்றுள்ளது.

திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்து மக்கள் தங்கள் ரேட்டிங்கை அளிக்கும் வகையிலான வலைதளம் ஐஎம்டிபி. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும். அந்த வகையில் தற்போது திரைப்படங்களுக்கு இணையாக வெப் சீரிஸ்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் வெளியான வலைத்தொடர்களில் டாப் 10 இடத்தைப் பிடித்த தொடர்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்தில் பஞ்சாயத் (Panchayat) தொடர் இடம்பெற்றுள்ளது. இது அமேசானில் வெளியானது. இந்தத் தொடர் 71000 வாக்குகளின் அடிப்படையில் 8.9 மதிப்பீட்டைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2-வது இடத்தில் ‘டெல்லி க்ரைம்’ (Delhi Crime) இடம்பெற்றுள்ளது. இந்தத் தொடரை நெட்ஃபிளிக்ஸில் காண முடியும்.

3-வது இடத்தில் சோனி லிவ் ஓடிடியில் வெளியான ‘ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), 4-வது இடத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியான ‘ஹியூமன்’ (Human) தொடர் இடம்பெற்றுள்ளது. 5-வது இடத்தில் வூட் செயலியில் வெளியான ‘அப்ஹாரன்’ (Apharan) இடம்பெற்றுள்ளது. 6-வது இடத்தில் சோனி லிவ் ஓடிடியில் வெளியான குல்லாக் (Gullak), 7வது இடத்தில் ‘என்சிஆர் டேஸ்’ (NCR Days) இடம் பெற்றுள்ளன. 8-வது இடத்தில் ‘அபே’ (Abhay) தொடர் உள்ளது. இது ஜீ ஓடிடி தளத்தில் வெளியானது. 9-வது இடத்தில் ‘எம் எக்ஸ் பிளேயரில் வெளியான ‘கேம்பஸ் டைரிஸ்’ (Campus Diaries), 10வது இடத்தில் சோனியில் வெளியான ‘காலேஜ் ரொமான்ஸ்’ (College Romance) இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x