Published : 22 Aug 2022 07:35 AM
Last Updated : 22 Aug 2022 07:35 AM
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். சிறந்த கர்னாடக சங்கீத பாடகருமான இவர், 1934-ம் ஆண்டு ‘பவளக்கொடி’ மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 1944-ல் வெளியான இவரின் ‘ஹரிதாஸ்’, தொடர்ச்சியாக 3 தீபாவளியைக் கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனைப் படைத்தது.
எம்.கே.டி என அழைக்கப்படும் தியாகராஜ பாகவதர், புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி 30 மாதங்கள் சிறையில் கழித்தார்.பின்னர் மேல் முறையீடு செய்து குற்றமற்றவர் என நிரூபித்து விடுதலையானார்.
பின் அவர் வாழ்க்கை வறுமையில் கழிந்தது. இந்நிலையில் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதை இணைய தொடராக உருவாகிறது. இதை இயக்குநர் வசந்த் இயக்குகிறார். நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT