Published : 06 Jan 2022 01:02 PM
Last Updated : 06 Jan 2022 01:02 PM
‘டோன்ட் லுக் அப்’ படம் வெளியான இரண்டே வாரங்களில் நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
ஆடம் மெக்கே இயக்கத்தில் லியர்னாடோ டிகாப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ள படம் ‘டோன்ட் லுக் அப்’. இப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு விண்கல்லை பற்றி தெரிந்துகொள்ளும் இரண்டு விஞ்ஞானிகளை சுற்றி நடக்கும் கதையில் காலநிலை மாற்றம், சமகால அமெரிக்க அரசியல் ஆகியவற்றை நக்கலுடன் ரசிக்கத் தக்க வகையில் படமாக்கியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது. வெளியான இரண்டே வாரங்களில் நெட்ஃப்ளிக்ஸின் டாப் 10 படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ட்வைன் ஜான்சன், ரயான் ரெனால்ட்ஸ் நடித்த ‘ரெட் நோட்டீஸ்’ படமும், சாண்ட்ரா புல்லக் நடித்த ‘பேர்ட் பாக்ஸ்’ படம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
‘டோன்ட் லுக் அப்’ படம் வெளியாகி இரண்டு வாரங்களில் 263 மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT