Published : 11 Feb 2025 03:57 PM
Last Updated : 11 Feb 2025 03:57 PM
மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘சுழல்’ வெப் தொடரின் இரண்டாம் பாகம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற வெப் தொடர் ‘சுழல்’. இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் பிரம்மா மற்றும் அனுசரண் ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தார்கள். இந்த தொடரை புஷ்கர் – காயத்ரி ஜோடி தயாரித்திருந்தது.
‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததால், அதன் 2-ம் பாகம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதியுள்ள இந்தத் தொடரினை பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கி இருக்கிறார்கள். குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு க்ரைம் திரில்லராக இதனை உருவாக்கி இருப்பதாக வெப் தொடரின் குழு தெரிவித்துள்ளது.
இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிப்ரவரி 28-ம் தேதி ‘சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2’ இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment