Published : 12 Aug 2024 08:17 PM
Last Updated : 12 Aug 2024 08:17 PM
சென்னை: ‘ஸ்குவிட் கேட் 2’ வெப்சீரிஸின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முந்தைய சீசனின் வெற்றியாளரான சியோங் கி ஹுன் இந்த சீசனுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். பின்னணியில் வரும் இசை முதல் பாகத்தின் நினைவுகளை கிளறிவிடுகிறது. 456 என்ற எண் குறிக்கப்பட்ட ஆடை அணிந்திருக்கும் கி ஹுன் ஆக்ரோஷத்துடன் திரும்புகிறார். மேலும் சில போட்டியாளர்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் முகங்கள் தெரியவில்லை. மர்மங்களுடன் ‘தி ரியல் கேம் பிகின்ஸ்’ என்ற வார்த்தைகளுடன் அறிமுக வீடியோ முடிகிறது. 30 நொடிகள் கொண்ட வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. மேலும் சீசன் 2-ல் என்ன மாதிரியான விளையாட்டுகள் இருக்கும் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.
ஸ்குவிட் கேம்: கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய இணைய தொடரான 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாம் சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் 3ஆவது மற்றும் இறுதி சீசன் வரும் 2025-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment