Published : 01 Aug 2024 05:59 PM
Last Updated : 01 Aug 2024 05:59 PM

‘ஸ்குவிட் கேம்’ 2-வது சீசன் டிசம்பர் மாதம் ரிலீஸ்: நெட்ஃப்ளிக்ஸ் அறிவிப்பு

சென்னை: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான தென்கொரிய தொடரான 'ஸ்குவிட் கேம்' தொடரின் இரண்டாவது சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய இணைய தொடரான 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாம் சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் 3ஆவது மற்றும் இறுதி சீசன் வரும் 2025-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x