Published : 02 Jul 2024 05:15 PM
Last Updated : 02 Jul 2024 05:15 PM

சூரியின் ‘கருடன்’ புதன்கிழமை ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: சூரி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘கருடன்’ திரைப்படம் புதன்கிழமை (ஜூலை 3) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

ரூ.20 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் மொத்தமாக ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. இந்நிலையில் இப்படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை சிம்ப்ளி சவுத் (Simply South) ஓடிடி தளத்திலும் காண முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x