Published : 27 May 2024 05:58 PM
Last Updated : 27 May 2024 05:58 PM

வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வருஷங்களுக்கு சேஷம்’ ஜூன் 7-ல் ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வருஷங்களுக்கு சேஷம்’ மலையாளத் திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை எட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள மலையாள படம் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham). படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தியான் ஸ்ரீனிவாசன், பசில் ஜோசப், நீரஜ் மாதவ், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உலக அளவில் படம் ரூ.80 கோடியை வசூலித்துள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 7-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x