‘மார்கழி திங்கள்’ முதல் ‘கூழாங்கல்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘மார்கழி திங்கள்’ முதல் ‘கூழாங்கல்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸான படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் நாளை (அக்.27) திரையரங்குகளில் வெளியாகிறது. ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘புலிமடா’, ஆசிஃப் அலியின் ‘ஓட்டா’ ஆகிய மலையாள படங்களை நாளை காணலாம். சம்பூர்ணேஷ் பாபுவின் ‘மார்டின் லூதர் கிங்’ தெலுங்கு படம் நாளை வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் ‘தேஜஸ்’, விது வினோத் சோப்ராவின் ‘12த் ஃபெயில்’, ஆகிய இந்திப் படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. லியனார்டோ டிகாப்ரியோவின் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ (Killers of the Flower Moon) ஹாலிவுட் படத்தை நாளை காணலாம்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்ட பி.எஸ்.வினோத்ராஜின் ‘கூழாங்கல்’ திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அமிதாஷ் பிரதான் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவான ‘பரம்பொருள்’ ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது. ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தை இன்று முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம். ஜெயம் ரவியின் இறைவன் படத்தையும் நெட்ஃப்ளிக்ஸில் காண முடியும். ஹமரேஷ் நடித்துள்ள ‘ரங்கோலி’ அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. ராம் பொதினேனியின் ‘ஸ்கண்டா’ (Skanda) தெலுங்கு படம் நாளை (அக்.27) ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இணைய தொடர்கள்: நித்யாமேனனின் ‘மாஸ்டர் பீஸ்’ (Masterpeace) மலையாள இணைய தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in