Published : 30 Jul 2023 01:44 PM
Last Updated : 30 Jul 2023 01:44 PM
சென்னை: மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம்.
கட்சிக்குள் இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாக சொன்ன திரைப்படம். பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
கடந்த 27ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த நிலையில் இப்படம் வெளியானது முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ள பட்டியலிலும் ‘மாமன்னன்’ முதலிடத்திலும், ஜாக்கிசானின் ‘ஹிட்டன் ஸ்ட்ரைக்’ 2வது இடத்திலும், அனிமேஷன் படமான ‘லேடிபக் கேட் நோய்ர்’ 3வது இடத்திலும் உள்ளன.
Even those drops of blood that were shed rejoice #Maamannan
Trending #1in India on #Netflix #MaamannanBlockbuster @Udhaystalin @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off… pic.twitter.com/wRlcBXJEej— Mari Selvaraj (@mari_selvaraj) July 30, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT