Last Updated : 27 Sep, 2017 03:20 PM

 

Published : 27 Sep 2017 03:20 PM
Last Updated : 27 Sep 2017 03:20 PM

நைட் கிளப்பில் தகராறு: பென் ஸ்டோக்ஸ் கைதாகி விடுவிப்பு; 4-வது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கம்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இரவு விடுதி ஒன்றில் தகராறு காரணமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதையடுத்து ஸ்டோக்ஸ் இவருடன் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் மே.இ.தீவுகளுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பிரிஸ்டலில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது. அன்றுதான் மொயின் அலி 53 பந்துகளில் சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார். ஸ்டோக்ஸ் 73 ரன்களை விளாசினார்.

பிரிஸ்டலில் அன்று இரவு விருந்தில் கலந்து கொண்ட ஸ்டோக்ஸ் எம்பார்கோ இரவு விடுதியில் எதற்காகவோ யாருடனோ ஏற்பட்ட தகராறில் தன் கையில் காயம்பட்டுக் கொண்டார். ஒரு நபருக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. காயமேற்படுத்தியதாக ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியை அறிவிக்கும் நேரத்தில் இந்த செய்தி ஸ்டோக்ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் அவர் கைது செய்யப்பட்டு ஓர் இரவு மட்டும் சிறையில் கழித்து விட்டு காலையில் குற்றச்சாட்டு எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டார். கூட இருந்த ஹேல்ஸும் இவரால் இன்றைய ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தகவல்களை இப்போதைக்கு அளிக்க முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மறுத்துள்ளார்.

ஆனால் ஆஷஸ் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் துணைக் கேப்டனாக நீடித்திருப்பதாக கடைசியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x